கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
வேளாங்கண்ணி அருகே கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேளாங்கண்ணி அருகே கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை பிரம்மோற்சவம்
வேளாங்கண்ணி அருகே கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
வேளாங்கண்ணி அருகே உள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் கேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது வருகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் செல்லும் வழிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.