சதுரங்கவல்லபநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்து உள்ளது போல் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.ஞாயிற்றுக்கிழமை தோறும் இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன்பு எலிக்கடி மற்றும் விஷக்கடிகளுக்கு வேர் கட்டப்படுகிறது. இந்த கோவிலில் காலபைரவாஷ்டமி விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு மாலை விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு காலபைரவ மகாயாகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தயிர் பள்ளயம் படைக்கப்பட்டது. காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எஸ்.மாதவன், செயல்அலுவலர் பி.பிரபாகரன் மற்றும் காலபைரவாஷ்டமி ஹோம உபயதாரர்கள் செய்திருந்தனர்.இதேபால் திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் காலபைரவருக்கு வடை மாலை சாத்தப்பட்டது. சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.