உலக நலனுக்காக கலசவிளக்கு வேள்வி பூஜை
கோவில்பட்டி ஆதிபராசகத்தி மன்றம் சார்பில் உலக நலனுக்காக கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.
சக்தி கொடியை மாவட்ட துணை தலைவர் பண்டார முருகன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரசாரக் குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார். விழாவில் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி, வட்டத் தலைவர்கள் பால்ச்சாமி, அழகர்சாமி, செல்வம், எம்.ஜி.ஆர்.நகர் மன்ற தலைவி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.