கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநத்தம்,
வேப்பூர் அடுத்த கழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவிகள், மற்றவர்களிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத நபரிடம் பேசுதல் கூடாது, தன்னை பின் தொடர்ந்து யாராவது வந்தால் அருகே உள்ள போலீஸ் நிலையம் அல்லது அருகில் உள்ள பொதுமக்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஆண் பெண் பாகுபாடின்றி பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கழுதூர் கருணாநிதி, மலையனூர் தேவராஜ், மங்களூர் ராமு, பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, மேற்பார்வையாளர்கள் சாரதாம்பாள், பாத்திமா, தில்லைக்கரசி, தமிழ்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், ரஞ்சிதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.