கழுகுமலையில்விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்


கழுகுமலையில்விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில்விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுகா குழு தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் வருகிற 26-ந் தேதி தாலுகா குழு சார்பில் 50 டிராக்டரில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story