கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவுவிழா
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவுவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கே.லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கழுகுமலை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராமன் சிறப்புரையாற்றினர். பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. முகாமில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்ராஜ் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுந்தர்ராஜ், மாரிகனி, கல்யாணசுந்தரம், கருமலைராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story