பிளஸ்-2 தேர்வில் கழுகுமலை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
பிளஸ்-2 தேர்வில் கழுகுமலை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி
கழுகுமலை:
பிளஸ்-2 பொதுத் தேர்வில் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் பாரதி வரலாறு பாடப்பிரிவில் 100 மதிப்பெண்களும், மாணவி முத்துமாரி இந்திய பண்பாடு பாடத்தில் 100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். மேலும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 46 பேரும் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி, ஆசிரியர்கள் மாரிகனி, கந்தையா, கருமலைராஜன் மற்றும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story