காளியம்மன் கோவில் கொடைவிழா
கோவில்பட்டியில் காளியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் 58-ம் ஆண்டு கொடை விழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்று நிறைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் வி.செண்பகமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிசாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story