காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா


காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 3-வது வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


Next Story