காளியம்மன், காந்தாரியம்மன் கோவில் கொடை விழா


காளியம்மன், காந்தாரியம்மன் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே சம்பகுளம் காளியம்மன், காந்தாரியம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள சம்பகுளம் காளியம்மன் மற்றும் காந்தாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 27-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் உச்சிகால பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூங்குழி இறங்குதல் நிகழ்ச்சியை களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் பஞ்சாயத்து துணை தலைவர் மாரிராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story