கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர்லால், விஜய் கார்த்திக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இவர்களிடம், மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா? என போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். அப்போது 21 பேர் தங்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும், தங்கள் மனு மீது உரிய மறுவிசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்த அந்த 21 பேரின் மனு மீது மறு விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.

அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு திருமேணி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story