தமிழர்களின் வாழ்வியலை கூறும் 'கல்திட்டை'


தமிழர்களின் வாழ்வியலை கூறும் கல்திட்டை
x
திருப்பூர்


மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் தமிழர்களின் வரலாற்று அடையாளமாக 'கல்திட்டை' உள்ளது.

'கல்திட்டை'

மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது மக்கள் குழுக்களாக வசித்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒருவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அப்போதைய காலகட்டத்தில் இது போன்ற குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன.

இந்த சண்டையில் முக்கிய நபர்கள் இறந்த போதும் அல்லது இயற்கை பேரிடர்களில் இருந்து பலரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த போதும் அந்த நபரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைத்து வணங்கும் வழக்கம் தமிழர் மரபில் இருந்துள்ளது. இது "கல்திட்டை" என அழைக்கப்படுகிறது.

தனி மயானம்

மடத்துக்குளம் தாலுகா கிழக்கு நீலம்பூரிலிருந்து பாப்பான்குளம் செல்லும் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விளை நிலங்களுக்கு மத்தியில் இதுபோன்ற 'கல்திட்டை' உள்ளது. 6 அடி உயரம் 3 அடி அகலமுள்ள 7 பாறை துண்டுகளை சதுரவடிவில் நட்டு வைத்து அதன் மீது இதே அளவுள்ள பாறைகளை மேற்கூரையாக அமைத்துள்ளனர். முன்பக்கம் 2 அடி அகலம் உள்ள நுழைவாயில் மட்டும் உள்ளது.

கிழக்கு நோக்கி வாசல் உள்ளதாக சிறிய அறை போன்ற அமைப்பில் இந்த 'கல்திட்டை' காணப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கிராம வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் தனி மயானம் இருந்துள்ளது. அதில்தான் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர்.

வாழ்வியலின் அடையாளம்

இந்த 'கல்திட்டை' அமைக்கும் வழக்கம் என்பது அதற்கும் முற்பட்ட ஆண்டுகளின் வாழ்வியலை அடையாளப்படுத்துகிறது. இந்த 'கல்திட்டை'யில், கல்வெட்டுகளோ, சிற்பமோ எதுவும் இல்லை.

இதனால் கல்வெட்டு அமைக்கும் காலத்துக்கும் முற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் மிக பழமையான காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த அடையாள


Next Story