கல்வடங்கம் கரியகாளியம்மன் கோவில் தீமிதி விழா-பக்தர்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன்


கல்வடங்கம் கரியகாளியம்மன் கோவில் தீமிதி விழா-பக்தர்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x

கல்வடங்கம் கரிய காளியம்மன் கோவில் தீமிதி விழாவில் பக்தர்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம்

தேவூர்:

கல்வடங்கம் கோவில்

தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் கிராமப்புற பகுதி மக்களின் ஊர் கோவிலாக சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், கரிய காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்வடங்கம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், கரிய காளியம்மன் கோவில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.

தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது, கல்வடங்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள் தீமிதி விழாவிற்காக விரதம் இருந்து கோவில் சன்னதியில் வழிபாடு செய்து வந்தனர்,

பக்தர்கள் தீ மிதித்தனர்

இந்நிலையில் நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி கரியகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான மக்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர், சில தம்பதியினர் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் நடுவில் நின்று குழந்தைக்கு பால் ஊற்றி தீ மிதித்து சென்றனர் மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியவாறு தீ மிதித்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு தட்டம் எடுத்தல், கோழி, கிடா பலியிடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர், பூமணியூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர், தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்


Next Story