காமாட்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
காமாட்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி
தேனி அருகே வீரபாண்டி மற்றும் சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி காமாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் ஆகிய பகுதிகளுக்கும், வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story