கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?


கண்காணிப்பு கேமரா   அமைக்கப்படுமா?
x
திருப்பூர்


பெதப்பம்பட்டி நால்ரோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெதப்பம்பட்டி நால்ரோடு

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சோமவாரப்பட்டி ஊராட்சி. சோமவாரப்பட்டி ஊராட்சியில் பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, எஸ். அம்மாபட்டி, ஆர்.ஜி.ரத்தினம்மாள்நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சோமவாரப்பட்டி ஊராட்சியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பெதப்பம்பட்டியில் வணிககண்காணிப்பு கேமரா

அமைக்கப்படுமா? நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், அரசு ஆரம்பசுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது,

கண்காணிப்பு கேமரா

பெதப்பம்பட்டியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில் தங்களின் தேவைகளுக்காக பொதுமக்கள் அடிக்கடி பெதப்பம்பட்டி வந்து செல்கின்றனர்.

பொள்ளாச்சி- தாராபுரம், உடுமலை-செஞ்சேரிமலை சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாக பெதப்பம்பட்டி நால்ரோடு உள்ளது.

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாகவும், உடுமலை-செஞ்சேரிமலை சாலை வழியாகவும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும்போது வாகனங்கள் நிற்காமல் சென்று விடுகின்றன.

பெதப்பம்பட்டிக்கு அதிகளவில் மக்கள் சென்று வரும் நிலையில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும் இரவு நேர பாதுகாப்பு கருதியும் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story