காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கரூர்
க.பரமத்தி அருகே உள்ள மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அரிமா செல்லமுத்து தலைமை தாங்கினார்.
பள்ளியின் முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மழலையருக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் தேச தலைவர்கள், காவலர், மருத்துவர், கிருஷ்ணன் மற்றும் ராதை என பல்வேறு வேடங்களில் வந்து அசத்தினர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன. இதில், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story