காமராஜர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா


காமராஜர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
x

முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 33-வது ஆண்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 33-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சத்ரிய இந்து நாடார் உறவின் முறையின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் வயனபெருமாள், ஆசிரியர் துரைப்பாண்டியன், மேலாளர் ரவீந்திரன், பொருளாளர் முத்து முருகன், தொழிலதிபர் ராமச்சந்திரன், முதுகுளத்தூர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அய்யாசாமி அனைவரையும் வரவேற்றார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலங்களில் பள்ளி ஆண்டு விழா நடைபெறாததால் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டன.இதில் பள்ளி மாணவ-மாணவியருக்கு கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் பம்பர் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் முன்னாள் பொருளாளர் ஜெயராஜ், கல்வி குழு உறுப்பினர்கள் மணிக்குமார், நாகராஜன், பாண்டி, குமரன், மாதவன் ,ஜெயபிரகாஷ் உள்பட கல்வி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story