காமராஜர், எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன விழா


காமராஜர், எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன விழா
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மயிலப்பபுரத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே மயிலப்பபுரத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவனத்தின் 34-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் பரமசிவன் முன்னிலை வைத்தார். காமராஜர், எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன தலைவர் டி.செல்வின் வரவேற்றார். விழாவில் முதியோர்களுக்கு சேலைகள், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு பிளாஸ்டிக் தட்டுகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேனாக்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. மேலும் 9-ம் வகுப்பு மாணவி அபிஷாவிற்கு சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுரண்டை நகராட்சி உறுப்பினர் ராஜ்குமார், அ.தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் பிலிப்ஸ், விவசாய அணி தலைவர் திருமால், காங்கிரஸ் பிரமுகர் ஞானதுரை, கம்யூனிஸ்டு கட்சி முருகன், ஐந்தாங்கட்டளை டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன்நீல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story