கம்பராய பெருமாள் கோவிலில்பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
கம்பம், கம்பராய பெருமாள் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தேனி
கம்பத்தில், ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணன் பிறந்த நாளான ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெண்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்றனர். கம்பம் மாலையம்மாள்புரத்தில் தொடங்கிய ஊர்வலம் யாதவர் தெரு, செக்கடி தெரு, போக்குவரத்து சிக்னல் வழியாக கம்பம் கம்பராய பெருமாள் கோவிலுக்கு சென்றது. பின்னர் கம்பராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.முன்னதாக வேணுகோபால கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை, நரசிம்மர் வேடம் அணிந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story