வெங்கடாஜலபதிக்கு கம்பசேவை விழா


வெங்கடாஜலபதிக்கு கம்பசேவை விழா
x

வேதாரண்யம் அருகே வெங்கடாஜலபதிக்கு கம்பசேவை விழா நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு யாதவபுரத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதிக்கு 69-வது ஆண்டு கம்பசேவை விழா கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினமும் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், நவகுசா ராம நாடகம், நடப்பியல் நாடகம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி முதலியன நடைபெறுகிறது. விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை யாதவபுரம் கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். கம்பசேவை விழா வருகிற 20-ந் தேதி(சனிக்கிழமை) விடையாற்றியுடன் நிறைவடைகிறது.



Next Story