கம்பிவேலி அமைத்து இடம் ஆக்கிரமிப்பு


கம்பிவேலி அமைத்து இடம் ஆக்கிரமிப்பு
x
திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் காசிலிங்கம்பாளையம் நாவிதன்புதூர் பகுதியை சேர்ந்த மயிலாள் மற்றும் குடும்பத்தினர் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர் அளித்த மனுவில்,'எனக்கு கடந்த 2008-ம் ஆண்டு அரசு சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. எனது இடத்தையும் சேர்த்து அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார். வீதி பொது குடிநீர் குழாய், கம்பி வேலிக்குள் இருக்கிறது. ஊரை சுற்றி வந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி கம்பி வேலியை அகற்றிக்கொடுத்து தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

எங்கள் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். கோவில் இடத்துக்குள் நாங்கள் வரக்கூடாது என்று அடக்குமுறையை கையாண்டு வருகிறார்கள். அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story