கம்பம் நகராட்சி பகுதியில்சொத்துவரி எண்ணுடன், ரேஷன் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்:நகராட்சி பொறியாளர் தகவல்


கம்பம் நகராட்சி பகுதியில்சொத்துவரி எண்ணுடன், ரேஷன் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்:நகராட்சி பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் நகராட்சி பகுதியில் சொத்துவரி எண்ணுடன், ரேஷன் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

தேனி

தமிழகத்தில் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் யூ.டி.ஐ.எஸ். (நகர்ப்புற ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு) மென்பொருளில் ஒவ்வொரு சொத்து வரி எண்ணுடன், ரேஷன் கார்டு எண்ணையும், அனைத்து வணிக பயன்பாட்டு வரி எண்ணுடன் பான் கார்டு அல்லது ஜி.எஸ்.டி. எண்ணை இணைக்க வேண்டும் என அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பினார். இதுகுறித்து அந்தந்த நகராட்சி அலுவலகங்களிலும் இணையவழி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக மதுரை மண்டல இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.

அதன்படி கம்பம் நகராட்சி அலுவலகத்தில் இணையவழி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நகராட்சி பொறியாளர் கூறுகையில், கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 12 ஆயிரத்து 800 வீடுகள், 2 ஆயிரத்து 100 வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது.

இதில் வீடுகளுக்கான சொத்துவரி எண்ணுடன் ரேஷன் கார்டு எண், வணிக நிறுவனங்களுக்கான சொத்துவரி எண்ணுடன் பான் கார்டு அல்லது ஜி.எஸ்.டி. எண்ணை இணைக்கும் பணி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. எனவே நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புதாரர்கள், வணிக நிறுவனத்தினர் தங்களது சொத்து வரி எண்ணுடன் ரேஷன் கார்டு எண், பான் கார்டு, ஜி.எஸ்.டி எண்ணை நகராட்சி வரி வசூல் மையங்களில் இணைத்து கொள்ளலாம் என்றார்.


Next Story