விழுப்புரத்தில் கம்பன் விழா
விழுப்புரத்தில் கம்பன் விழா நடைபெற்றது.
விழுப்புரத்தில் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுச்சேரி சட்டசபை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். விழுப்புரம் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கம்பன் கழக தலைவர் தனபால் அனைவரையும் வரவேற்றார். கம்பன் கழக செயலாளர் சங்கரன் படத்தை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. டாக்டர் ராமலிங்கம் தலைமையில் பேராசிரியர்கள் அன்பு, வாசு சசிக்குமார் வழக்காடினர். விழாவையொட்டி பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ராம காதையின் நோக்கம் நிறைவேற பெரிதும் துணை செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இவ்விழாவில் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, ரோட்டரி சங்க தலைவர் நம்மாழ்வார், சங்க தலைவர்கள் சிவராமன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணசாமி, செந்தில்குமார், பழனி, சண்முகம், முத்துகிருஷ்ணன், ராஜாராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.