காஞ்சியப்பர் கோவில் குடமுழுக்கு
புஷ்பவனம் காஞ்சியப்பர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் காஞ்சியப்பர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக 13-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும், மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. இதை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதேபோல தலைஞாயிறு அருகே கோவில்பத்து ஊராட்சியில் எனையாளும் கண்ணபெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் கோவில் தக்கார் ஜெயசந்திரன், செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன், விழா குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காடந்தேத்தி வரதராஜபெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவும் நடந்தது.