கண்டமங்கலம் கோட்ட மின்வாரிய அலுவலகங்கள் இடமாற்றம்
கண்டமங்கலம் கோட்ட மின்வாரிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கண்டமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட உதவி மின் பொறியாளர் பாக்கம் பிரிவு அலுவலகம், பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் கடந்த 7-ந் தேதி முதல் வெள்ளாழங்குப்பம் சாலை கோண்டூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் எதிரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பாக்கம், துலுக்கநத்தம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம், ஆர்.ஆர்.குளம், கோண்டூர், ராமரெட்டிக்குளம், ஆலமரத்துக்குளம், வெள்ளாழங்குப்பம் ஆகிய பகிர்மான மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்த மற்றும் பாக்கம் பிரிவு அலுவலகம் சம்பந்தமான நடைமுறை சேவையை பெற தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலக முகவரியில் தொடர்புகொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேபோல் வளவனூர் உபகோட்ட இளமின் பொறியாளர் மோட்சகுளம் பிரிவு அலுவலகம் சிறுவந்தாடு பிள்ளையார் கோவில் தெருவில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் கடந்த 9-ந் தேதி முதல் மோட்சகுளம் மகாலட்சுமி நகரில் பரசுரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மோட்சகுளம், உத்தமபாளையம், நரியோடை, புதுப்பாளையம், அற்பிசம்பாளையம், தாதம்பாளையம், பூவரசன்குப்பம், தொந்திரெட்டிப்பாளையம், பூதேரி, பெரியேரி ஆகிய பகிர்மான மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்த மற்றும் மோட்சகுளம் பிரிவு அலுவலகம் சம்பந்தமான நடைமுறை சேவையை பெற தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலக முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கண்டமங்கலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.