இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்ததாக திரைப்பட சண்டை மாஸ்டரும், இந்து கலை இலக்கிய முன்னணி பொருப்பாளருமான கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இதைக்கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் காங்கயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கனல் கண்ணன் விஷயத்தில் அரசு மற்றும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போலீசாரின் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி, பொதுச்செயலாளர் சதீஷ்குமார், செயலாளர் சங்கிலித்துரை, விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராஜகோபால், பாரதிய கிசான் சங்கம் மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, ஆர்.எஸ்.எஸ் செல்வம் உள்ளிட்ட 27 பேரை போலீசார் கைது செய்து காங்கயம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story