மறுசுழற்சி கழிவுகள் சேகரித்தல் பற்றிய விழிப்புணர்வு
திருப்பூர்
காங்கயம் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நகர குடியிருப்புகளில் மின்னணு கழிவுகள் மற்றும் மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய இதர கழிவுகளை சேகரித்து, அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று மறுசுழற்சி பயன்பாட்டிற்கான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்குரிய தொகை கிலோ ஒன்றுக்கு ரூ.12 வீதம் உரிய நபர்களுக்கு வழங்கப்படும் திட்டத்தை நேற்று காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலையில், நகர்மன்ற தலைவர் ந.சூரியபிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதன் முதற்கட்டமாக காங்கயம் நகரம், 1-வது வார்டு திரு.வி.க நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story