பெருந்துறை அருகே காங்கேயம் காளைகள் கண்காட்சி


பெருந்துறை அருகே காங்கேயம் காளைகள் கண்காட்சி
x

பெருந்துறை அருகே காங்கேயம் காளைகள் கண்காட்சி நடந்தது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே காங்கேயம் காளைகள் கண்காட்சி நடந்தது.

கண்காட்சி

பெருந்துறை-கோவை ரோட்டில் கருக்கங்காட்டூர் அருகே காங்கேயம் காளைகள் மற்றும் மாடுகளின் கண்காட்சி நேற்று நடந்தது.

அறச்சலூர், அவல்பூந்துறை, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், ஈரோடு, திருப்பூர், காங்கேயம், நத்தக்காடையூர், சேலம், எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காங்கேயம் நாட்டு மாடு இனத்தை சேர்ந்த காளைகள், வெண்மை நிற காங்கேயம் பசு மாடுகள் மற்றும் அதன் கன்று குட்டிகள், மாடுகள், கன்றுக்குட்டிகள் என 300-க்கும் மேற்பட்டகாங்ேகயம் இன மாடுகள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டன.

இன விருத்திக்காக வளர்க்கப்படும் காளைகளும், நாட்டு மாடுகளும், கன்றுக்குட்டிகளும் அதிகமாக கொண்டுவரப்பட்டு இருந்தன.

சிறந்த காளைகளுக்கு பரிசு

பெருந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கண்காட்சியில் கலந்துகொண்டு காங்கேயம் காளைகளையும், மாடுகளையும் கண்டு ரசித்தனர்.

கண்காட்சி முடிவில் காளைகள், மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் சிறப்பாக வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த கால்நடை கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு மாடு வளர்ப்பு ஆர்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story