மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அடக்க நினைக்கிறார்கள்


மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அடக்க நினைக்கிறார்கள்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அடக்க நினைக்கிறார்கள் என்று ராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் கனிமொழி எம்.பி. கூறினார்.

ராமநாதபுரம்

மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அடக்க நினைக்கிறார்கள் என்று ராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் கனிமொழி எம்.பி. கூறினார்.

அடையாள அட்டை

ராமநாதபுரம் மாவட்டம் பாரம்பரிய இயற்கை கடல்பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

அடக்க நினைக்கிறார்கள்

பிரதமர் மோடி குறித்த பி.பி.சி. ஆவணப்படம் வெளியான நிலையில் அந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது, மத்திய அரசை எதிர்த்து கருத்து கூறினாலும், எந்த கேள்வி கேட்டாலும், கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அடக்க நினைக்கிறார்கள்.

அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடர்வது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்று. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story