கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது திருப்பத்தூர் மின்நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்த சின்னையா (வயது 21) என்பதும், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் என்பதும், அவர்கள் 5 கிராம் எடை கொண்ட 5-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story