3½ கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது
3½ கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு போலீசார் மாநகர பகுதிகளில் கஞ்சா தடுப்பு தீவிர சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி எதிரே உள்ள பாலத்தில் கஞ்சா விற்பனை செய்த கல்லம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் கொடிக்கம்பம் டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை (21) கைது செய்து அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கோல்டன் நகர் எம்.ஜி.ஆர்.காலனியில் கஞ்சா விற்பனை செய்த பவானி நகரை சேர்ந்த பிரபுவை (30) கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பவானிநகரில் கஞ்சா விற்பனை செய்த கவுண்டநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை (25) கைது செய்து அவரிடம் இருந்து 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.