ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதியில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் நாலுவேதபதி மாரியம்மன் கோவிலிருந்து கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ஆதிபராசக்தி பக்தா்கள் சீர் வரிசை எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம், தலைஞாயிறு போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நாலுவேதபதி கிராமத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story