பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.22-லட்சத்திற்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை


பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.22-லட்சத்திற்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை
x

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.22-லட்சத்திற்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

திருப்பூர்

முத்தூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.22-லட்சத்திற்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மாட்டுத்தாவணி

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் வந்தனர். சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் காங்கயம் இன பசுமாடுகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை புற்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் பசுமாடுகள் கன்றுகள் வாங்கி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் இந்த சந்தையில் ற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 95 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 60 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

இதன்படி சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story