ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
x
திருப்பூர்

ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர் ரெயில்வே போலீசார், ரெயில்களில் கஞ்சா, போதைப்பொருள் தடுப்பு வேட்டைக்காக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று காலை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, காவலர்கள் ராஜதுரை, பர்கத்தலிகான் ஆகியோர் காலை 6 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அகல்யா நகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினார்கள். அப்போது பொதுப்பெட்டியில் கழிப்பிடம் அருகே கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற சாக்குப்பையை சோதனை செய்தபோது அதில் 3½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story