நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் நகராட்சி 19-வது வார்டு செட்டி தெரு பகுதியில் உள்ள என்.வி.எஸ். திருமண மண்டபம் அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் கோமதி ராஜா வரவேற்றார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஆவின் சேர்மனும், நகர செயலாளருமான எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் அரசு, கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.சந்திரசேகர், அரசு சித்த மருத்துவர் விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க தலைவர் எஸ். ராஜா நன்றி கூறினார்.


Next Story