கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலை வகித்தார். முகாமை ராமலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பஞ்சநாதன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி பங்கையர்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் முருகன், நகர துணை செயலாளர் பாலா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பல்வேறு சிறப்பு டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். இதில் 966 பேர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


Related Tags :
Next Story