கப்பூர் அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம்


கப்பூர் அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கப்பூர் அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள கப்பூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மச்சாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அந்தந்த உபயதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மச்சாரம்மன் எழுந்தருளினார். பின்னர் அந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இத்தேரானது, கோவிலின் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story