காரை வாய்க்கால் நாகர் கோவிலில்ஆவணி அவிட்டம் விழா பூணூல் மாற்றி கொண்ட பக்தர்கள்
காரை வாய்க்கால் நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா நடந்தது பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனா்.
ஈரோடு
ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நேற்று நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில் பூணூல் மாற்றி கொள்ளும் விழா சுயம்பு நாகர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு பூணூல் மாற்றி கொண்டனர். இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story