காரைக்குடி சிட்கோவை மேம்படுத்துவது எப்படி? -தொழில்துறையினருடன் அதிகாரி ஆலோசனை


காரைக்குடி சிட்கோவை மேம்படுத்துவது எப்படி? -தொழில்துறையினருடன் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி சிட்கோவை மேம்படுத்த தொழில்துறை கூடுதல் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி சிட்கோவை மேம்படுத்த தொழில்துறை கூடுதல் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலியிடங்களை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில், காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நலச்சங்க கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல் தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தொழிலதிபர்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும் விற்பனை விகித முறையையும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலியிடங்களை பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வசதிகள்

கூட்டத்தில் பங்கு பெற்ற காரைக்குடி தொழிற்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

கூட்டத்தில் சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி தாசில்தார் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் வேலுச்சாமி மற்றும் காரைக்குடியை சேர்ந்த தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story