கறம்பக்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்தார்


கறம்பக்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்தார்
x

கறம்பக்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்தார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியில் உள்ளார். இவரது குடும்பத்தினர் அறந்தாங்கியில் வசித்து வருகின்றனர். தினமும் 70 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி இருப்பதாலும், இரவு பகல்பாராது பணிசுமை இருந்ததாலும் இவர் மன சங்கடத்துடன் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இடமாறுதல் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி பணியில் இருந்தபோது திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி கிழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி தொடர் பணிசுமை காரணமாகவே மயங்கி விழுந்து உடல்நல குறைவு ஏற்பட்டதாக அவரது கணவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளருமான கவிவர்மன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இடமாறுதல் கேட்டு முதல்-அமைச்சர் தொடங்கி போலீஸ் சூப்பிரண்டு வரை 9 மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பளம் இல்லா விடுப்பு கேட்டும் வழங்கப்படவில்லை. 24 மணிநேரமும் ஓய்வில்லாமல் வேலை வாங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் யாரும் நிம்மதியாக இல்லை. நிர்வாக துன்புறுத்தல் காரணமாகவே இந்த நிலை என தெரிவித்தார்.


Next Story