கற்பக விநாயகர் கோவில் திருவிழா


கற்பக விநாயகர் கோவில் திருவிழா
x

கற்பக விநாயகர் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நொய்யல்,

நொய்யல் அருகே கவுண்டன் புதூரில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இ்க்கோவிலில் தங்காயியம்மன் குறித்த வரலாற்று கதைப்பாட்டு கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது. கதை பாட்டின் போது அந்தந்த வேடங்களுக்கு தகுந்தவாறு கதைப்பாட்டு பாடியவர்கள் வேடமணிந்து வரலாற்றின்படி நடித்துக் காட்டினார்கள். இந்நிலையில் கதைப்பாட்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கை நடந்தது. நேற்று காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கிடா வெட்டு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது.


Next Story