கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்


கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கரியமாணிக்க பெருமாள் கோவில்

நெல்லை மாவட்டத்தில் பழமையான வைணவத்தலங்களில் ஒன்று நெல்லை டவுனில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் இந்த விழா நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

10-ம் திருநாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கரியமாணிக்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சப்பரத்தில் எழுந்தருளி தேர் கடாட்சம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கரியமாணிக்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷம் முழங்க தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தோ் சென்று நிலையத்தை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டி மாநகராட்சி பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story