காரியாபட்டி பேரூராட்சி கூட்டம்
காரியாபட்டி பேரூராட்சி மன்றத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சி மன்றத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேருராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். ஜூலை 2023 முதல் பேரூராட்சி மன்ற தலைவருக்கு ரூ.10 ஆயிரமும், துணைத்தலைவருக்கு ரூ.5 ஆயிரமும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியமாக வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகிேயாருக்கு பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து, அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணைத்தலைவர் ரூபி, செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.