கர்நாடக அரசு பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது


கர்நாடக அரசு பஸ்சில்   தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
x

கர்நாடக அரசு பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

தாளவாடி

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு பஸ் மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கர்நாடக அரசு பஸ் வந்தது. உடனே போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது பஸ்சில் வந்த ஒருவரின் பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த அல்லாபகஸ் (வயது 38) என்பதும், அவர் 9 கிலோ புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ததுடன், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story