கர்நாடக மாநில பாக்கெட் மது விற்றவர் கைது
கர்நாடக மாநில பாக்கெட் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
கர்நாடக மாநில பாக்கெட் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சரத்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெட்டியூர் பகுதியில் கர்நாடக மாநில பாக்கெட் மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்றபோது ரெட்டியூர சின்ன கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் சேட்டு (வயது 39) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில பாக்கெட் மது விற்றதை கண்டுபிடித்தனர். அவர் வைத்திருந்த 480 பாக்கெட் மதுவை பறிமுதல் செய்து சேட்டுவை கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில்போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story