கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு


கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கச்சநகரம் கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூரை அடுத்த வலிவலம் அருகே உள்ள கச்சநகரம் குப்படித்தோப்பு கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கச்சநகரம், பனங்காடி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story