கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி


கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கடைஞாயிறு தீர்த்தவாரி

அரக்கனால் தனது சக்தியை இழந்த சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம்.அந்த வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.அதன்படி கார்த்திகை மாத கடைஞாயிறையொட்டி குத்தாலம் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

இதை முன்னிட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரர், மன்மதீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து சாமி மற்றும் அம்மன், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், வெள்ளி மயில்வாகனத்திலும், வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி ஊர்வலமாக காவிரி கரைக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதை தொடர்ந்து சாமிகளுக்கு ஒரே நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story