கார்த்திகைதீப அகல்விளக்குகள்


கார்த்திகைதீப அகல்விளக்குகள்
x

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

மயிலாடுதுறை

இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்றான திருக்கார்த்திகை திருநாளில் பாரம்பரியமாக மண் அகல்விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பீங்கான் அகல் விளக்குகள், சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வருகின்றனர். இதுமட்டும் இன்றி சீனாவில் இருந்து கலர், கலரான விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மண்ணையே மூலப்பொருளாக நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவ மழையை காரணமாக மண்பாண்ட பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விளக்குகளுக்கு தடை விதித்து எங்களை போன்ற தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.


Next Story