கார்த்திகை தீப திருவிழா: மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு


கார்த்திகை தீப திருவிழா: மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு
x

கார்த்திகை தீப திருவிழா: மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

மதுரை


தென்னக ரெயில்வே சார்பில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மதுரை - விழுப்புரம் ரெயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (7-ந் தேதி) ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை வரை செல்லும். இந்த ரெயில் (வ.எண்.16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு பகல் 11.15 மணிக்கு சென்றடையும். விழுப்புரத்திலிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16867) திருவண்ணாமலையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். விழுப்புரத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் போது, திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்.


Next Story