ஆரணியில் சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார விழா


ஆரணியில் சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார விழா
x

ஆரணி சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார விழா நடந்தது.

ஆரணி புதுக்காமூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழாவையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்க வேண்டியும் கோவில் வெளிவளாகத்தில் உள்ள வேம்பு, அரசு மரத்தினை நூல்வேலி அமைத்து 108 முறை வலம் வந்த வணங்கி மரத்தின் அருகாமையில் அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் செயதனர்.

மாலையில் சோமவார பிரதோஷத்தையொட்டி 27 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மகா அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோட்டை கைலாயநாதர், பூமிநாதர், வேதபுரீஸ்வரர், அருணாசலேஸ்வரர், அம்மையப்பர், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர், அடையபலம் காலகண்டீஸ்வரர், நீலகண்டேஸ்வரர், அக்ராபாளையம் மார்கசகாயேஸ்வரர், முள்ளிப்பட்டிஆபத் சகாயேஸ்வரர், காமக்கூர் சந்திரசேகர சாமி, பையூர்-சேவூர் விருப்பாச்சீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சோமவாரம் மற்றும் பிரதோஷ பூஜைகளிலும் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story